கார் ஏசி கூலிங் இல்லையா? இலவச 30-பாயிண்ட் செக்கப், வேலைக்கு முன் எழுத்தில் விலை, ரிப்பேருக்கு வாரண்டி.
வாரண்டி நாங்கள் மாற்றும் பாகங்களுக்கு: 10,000 கி.மீ. அல்லது 6 மாதம். கேஸ் ஃபில்லிங்குக்கு வாரண்டி இல்லை. வாரண்டி விவரம்
GM Car A/C Service: கள்ளிக்குப்பம் (அம்பத்தூர்), சூரப்பேட்டை ஆகிய இடங்களில் இரண்டு பணிமனைகள். கார் ஏசி கண்டறிதலும் ரிப்பேரும் எங்கள் முதன்மை வேலை; எல்லா பிராண்டு கார்களையும் பார்க்கிறோம். ஜெனரல் கார் சர்வீஸும் செய்கிறோம். உரிமையாளரும் தலைமை டெக்னீஷியனும்: G.M. Manigandan.
இலவச 30-பாயிண்ட் செக்கப்
30-பாயிண்ட் ஏசி மற்றும் எலக்ட்ரிக்கல் செக்கப் இலவசம். 15 முதல் 35 நிமிடம் ஆகும், எழுத்து மூலம் ரிப்போர்ட் தருவோம். கட்டணம் எதுவும் இல்லை; நீங்கள் ஒப்புக்கொள்ளாமல் எந்த வேலையும் தொடங்காது.
நாங்கள் செய்யும் வேலை
- கார் ஏசி கண்டறிதலும் ரிப்பேரும் (எல்லா பிராண்டுகளும்): கூலிங் குறைவு, காற்று குறைவு, சத்தம், கெட்ட வாசனை. விவரம்
- ஜெனரல் கார் சர்வீஸ்: காலமுறை சர்வீஸ். விவரம் (English)
- எலக்ட்ரிக்கல்: கார் எலக்ட்ரிக்கல் பழுது (English)
- பேட்டரி: பேட்டரி டெஸ்ட் மற்றும் மாற்றம் (English)
- பிரேக்: பிரேக் செக் மற்றும் ரிப்பேர் (English)
- சஸ்பென்ஷன்: சஸ்பென்ஷன் செக் மற்றும் ரிப்பேர் (English)
பிரேக்டவுன் அல்லது ரோட்சைடு உதவி, டோயிங், பாடி வொர்க், டயர் ஆகியவற்றை நாங்கள் செய்வதில்லை.
எங்கள் வேலை முறை
- கேட்போம். என்ன பிரச்சினை, எந்த கார், எப்போது தொடங்கியது என்று நீங்கள் சொல்லுங்கள். காரைத் தொடும் முன் அதை எழுதிக்கொள்வோம்.
- அளப்போம். இலவச 30-பாயிண்ட் ஏசி மற்றும் எலக்ட்ரிக்கல் செக்கப்பில் பிரஷர், டெம்பரேச்சர், வோல்டேஜ் பதிவாகும். ரீடிங்குகள் எழுத்து மூல ரிப்போர்ட்டில் வரும்.
- எழுத்தில் விலை. மதிப்பீட்டில் பாகமும் கூலியும் தனித்தனியாக இருக்கும். நீங்கள் ஒப்புக்கொள்ளாமல் பணம் வசூலிக்கும் வேலை தொடங்காது. வேலை மாறினால் முதலில் உங்களிடம் வருவோம்.
- ரிப்பேர் செய்து காட்டுவோம். ஒப்புக்கொண்ட வேலையை மட்டும் செய்வோம். பாகங்களை distributor விலையில் வாங்கிய invoice-ஐக் காட்டுவோம். பழைய பாகங்கள் கேட்டால் தருவோம்.
- மீண்டும் சரிபார்த்து, பின்தொடர்வோம். கார் கொடுக்கும் முன் வேலையை மறுபடி சரிபார்ப்போம். பிறகும் கேட்போம். மாற்றிய பாகம் வாரண்டி காலத்தில் பழுதானால் பில்லுடன் வாருங்கள்.
விலை
இரண்டு வேலைகளுக்கு மட்டும் தொடக்க விலை சொல்கிறோம்: கேஸ் ஃபில்லிங் ₹1,199 முதல், ஜெனரல் சர்வீஸ் ₹3,599 முதல். இறுதி விலை இலவச செக்கப்புக்குப் பிறகுதான். விலையை எப்படிச் சொல்கிறோம்
வாரண்டி
நாங்கள் மாற்றும் பாகங்களுக்கு 10,000 கி.மீ. அல்லது 6 மாதம் வாரண்டி. கார் பிராண்டையும், பொருத்தப்படும் பாகம் OE ஆ OEM ஆ என்பதையும் பொறுத்து சரியான காலம் மாறும்; அது உங்கள் பில்லில் எழுதப்பட்டிருக்கும். கேஸ் ஃபில்லிங்குக்கு வாரண்டி இல்லை. வாரண்டி விவரம்
பாகங்கள்
பாகங்களை distributor விலையில் வாங்கிய invoice-ஐக் காட்டுவோம். பழைய பாகங்கள் கேட்டால் திருப்பித் தருவோம்; கேட்காவிட்டால் scrap செய்வோம்.
Bajaj EMI
₹10,000 அல்லது அதற்கு மேல் உள்ள பில்லுக்கு Bajaj Finserv EMI வசதி உண்டு. இது lender ஒப்புதலைப் பொறுத்தது. மதிப்பீட்டை நீங்கள் ஒப்புக்கொண்ட பிறகு counter-ல் கேளுங்கள்.
EMI subject to lender approval, applicable terms and eligible services. Bajaj Finserv is the lender, not GM Car A/C Service.
இலவச பிக்-அப் மற்றும் டிராப்
உறுதி செய்யப்பட்ட முன்பதிவுகளுக்கு, இடம் இருந்தால், எங்கள் அம்பத்தூர் மற்றும் சூரப்பேட்டை பணிமனைகளிலிருந்து 25 கி.மீ.க்குள் இலவச பிக்-அப் மற்றும் டிராப். 25 கி.மீ.க்கு வெளியே இருந்தால் முதலில் எங்களுக்கு call செய்யுங்கள்; அங்கே பிக்-அப்புக்குக் கட்டணம் இருக்கலாம். பிக்-அப் விதிமுறைகள் (English)
மேலும் படிக்க
- ஏன் GM Car A/C Service
- விலையை எப்படிச் சொல்கிறோம்
- வாரண்டி
- கள்ளிக்குப்பம், அம்பத்தூர் பணிமனை
- சூரப்பேட்டை பணிமனை
- அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
- கார் ஏசி ரிப்பேர் விவரம்
தொடர்பு கொள்ள
கள்ளிக்குப்பம், அம்பத்தூர் பணிமனை (Kallikuppam): 12A, Gangai Amman Koil St, Kallikuppam, Ambattur, Chennai 600053. Call: +91 84280 00085 (call மட்டும்).
சூரப்பேட்டை பணிமனை (Surapet): 247, Sivaprakasam Nagar Main Rd, Surapet, Chennai 600066. Call அல்லது WhatsApp: +91 88893 60888. WhatsApp-ல் மெசேஜ் அனுப்புங்கள்.
திங்கள் முதல் சனி வரை, காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை. ஞாயிறு விடுமுறை.